/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்பாச்சேத்தி பாலம் சீரமைப்பு
/
திருப்பாச்சேத்தி பாலம் சீரமைப்பு
ADDED : ஜூன் 30, 2024 06:35 AM

திருப்பாச்சேத்தி, : திருப்பாச்சேத்தி வைகை ஆற்றுப்பாலத்தில் கான்கிரீட் சிமென்ட் பூச்சு பெயர்ந்து கம்பிகள் ஆபத்தான முறையில் வெளியே நீட்டி கொண்டிருப்பதாக தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதை அடுத்து நேற்று அதிகாரிகள் உடனடியாக சரி செய்தனர்.
திருப்பாச்சேத்தி, ஆவரங்காடு, பிச்சைப்பிள்ளையேந்தல், மாரநாடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் விளைவித்த பொருட்களான வாழை இலை, வாழைக்காய், தேங்காய் உள்ளிட்டவைகளை திருப்பாச்சேத்தி வைகை ஆற்றுப்பாலத்தை கடந்து தான் சிவகங்கை, திருப்புத்துார், காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
இந்தப்பாலம் போதிய பராமரிப்பு இன்றி சேதமடைந்து அதில் உள்ள கம்பிகள் வெளியே விபத்தை ஏற்படுத்தும் வகையில் நீட்டி கொண்டிருந்தது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதை அடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் கம்பிகள் நீட்டி கொண்டிருக்கும் பகுதியில் நேற்று பராமரிப்பு பணி மேற்கொண்டு சரி செய்ததை அடுத்து வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.