/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழடி 10ம் கட்ட அகழாய்வை பார்வையிட பார்வையாளர்கள் அனுமதிக்க கோரிக்கை

ADDED : ஜூன் 25, 2024 11:25 PM

கீழடி: கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வு பணிகளை காண பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வு கடந்த 18ம் தேதி தொடங்கியது. முதல் கட்டமாக இரண்டு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. பத்தாம் கட்ட அகழாய்வு திறந்த வெளி அருங்காட்சியகம் எதிரே தொடங்கப்பட்டிருப்பதால் அதனை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆனால் தொல்லியல் துறையினர் வெளி ஆட்கள் வருவதை தடுக்க அகழாய்வு தளத்தைச் சுற்றிலும் வேலி அமைத்ததுடன் கருவேல மரங்களையும் வெட்டி போட்டுள்ளனர்.
இதனால் சுற்றுலா பயணிகள் வேலியின் மறுபுறம் நின்று கண்டு செல்கின்றனர். ஏற்கனவே ஐந்தாம் கட்ட அகழாய்வு நடந்த போது ஒன்றரை லட்சம் பேர் அகழாய்வு பணிகளை பார்வையிட்டனர்.
அகழாய்வு பணிகளை இளைய தலைமுறையினர் நேரில் பார்வையிடும் போது தொல்லியல் சார்ந்த கல்வியின் மீது ஆர்வம் அதிகரிக்கவும், பண்டைய கால வரலாறுகளை அறிந்து கொள்ளவும் முடியும்.
எனவே தற்போது நடந்து வரும் பத்தாம் கட்ட அகழாய்வு காண அனுமதிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.