/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு மருத்துவமனைக்கு டாக்டர்களை நியமிக்க கோரிக்கை
/
அரசு மருத்துவமனைக்கு டாக்டர்களை நியமிக்க கோரிக்கை
ADDED : ஜூலை 02, 2024 10:34 PM
திருப்புத்துார்: திருப்புத்துார் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க தி.மு.க., சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
திருப்புத்துாரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கலெக்டர் ஆஷா அஜித்திடம் தி.மு.க., நகர் செயலர் கார்த்திகேயன் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: திருப்புத்துார் அரசு மருத்துவமனையில் தினசரி காலையில் 700, மாலையில் 200 புற நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப டாக்டர் இல்லை. அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை பார்க்க டாக்டர்கள் இல்லை. மகப்பேறு, குழந்தைகள் நல, இதய நோய், எலும்பு சிகிச்சை, பொது மருத்துவர் இல்லை. சிகிச்சைக்கு வருபவர்களை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர்.
கண் டாக்டர் இருந்தும் மருத்துவம் பார்க்க வசதி இல்லை. ரத்த வங்கி இருந்தும் நோயாளிகளுக்கு ரத்தம் கிடைப்பதில்லை. உள் நோயாளிகளுக்கான கழிப்பறையை பராமரிப்பதில்லை. ஐ.சி.யூ.விற்கான புதிய கட்டடம் கட்டி 3 ஆண்டுகளாகியும் மருத்துவ சிகிச்சைக்கான பயன்பாட்டிற்கு கொண்டு வராமல், மருத்துவமனை பணியாளர்கள் பயன்பாட்டில் உள்ளது.
பிரேத பரிசோதனைக்கு ரூ 3 ஆயிரம் வரை பணம் செலவாகிறது. போதிய மருத்துவர்களை நியமிக்கவும், அவசர சிகிச்சைக்கு சுழற்சி முறையில் டாக்டர்கள் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.