/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மண்ணுக்குள் புதையும் பெரியாறு நீட்டிப்புக் கால்வாய் தண்ணீர் திறப்புக்கு முன் சீரமைக்க கோரிக்கை
/
மண்ணுக்குள் புதையும் பெரியாறு நீட்டிப்புக் கால்வாய் தண்ணீர் திறப்புக்கு முன் சீரமைக்க கோரிக்கை
மண்ணுக்குள் புதையும் பெரியாறு நீட்டிப்புக் கால்வாய் தண்ணீர் திறப்புக்கு முன் சீரமைக்க கோரிக்கை
மண்ணுக்குள் புதையும் பெரியாறு நீட்டிப்புக் கால்வாய் தண்ணீர் திறப்புக்கு முன் சீரமைக்க கோரிக்கை
ADDED : ஆக 05, 2024 10:18 PM

சிங்கம்புணரி, - சிங்கம்புணரியில் மண்ணுக்குள் புதைந்தும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்தும் மாயமாகி வரும் பெரியாறு கால்வாயை மீட்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சிங்கம்புணரி, திருப்புத்துார் தாலுகாக்களில் குடிநீர், விவசாய தேவைக்காக பெரியாறு தண்ணீரை கொண்டு வருவதற்காக நீட்டிப்பு 7 வது பிரிவு கால்வாய் அமைக்கப்பட்டது. 24 கி.மீ., நீளம் கொண்ட இக்கால்வாயை நம்பி 480 கண்மாய்களும் 9159 ஏக்கர் நேரடி பாசனமும், 12445 ஏக்கர் மறைமுக பாசனமும் உள்ளன.
கால்வாய் அமைக்கப்பட்டு ஓரிரு வருடத்திற்கு பிறகு கால்வாயில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் பல இடங்களில் கால்வாய் மண்ணில் புதைந்தும் ஆக்கிரமிக்கப்பட்டும் மாயமானது. கால்வாய்களை மீட்கவோ சீரமைக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் சில ஆண்டுகளாக கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டாலும் அது கடைமடை வரை செல்ல முடியாமல் சிங்கம்புணரி, காளாப்பூர், முறையூர் வரை மட்டுமே செல்கிறது. மற்ற பகுதிகளுக்கு செல்ல கால்வாயை காணவில்லை. தற்போது அதுவரை செல்லும் கால்வாய் கூட சீமைக்கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்து கால்வாயே தெரியாத அளவிற்கு உள்ளது.
இன்னும் சில வாரங்களில் இக்கால்வாயில் தண்ணீர் திறந்து விடுவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில் தற்போது கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ராம.அருணகிரி, முன்னாள் எம்.எல்.ஏ., 7வது பிரிவு விஸ்தரிப்பு கால்வாய் தலைவர்: ஓரிரு ஆண்டுகளில் நிரந்தர கால்வாயாக மாற்றித் தருகிறோம் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் கால்வாய் அமைக்க விவசாயிகள் பாசன நிலங்களை வழங்கினர். ஆனால் அதற்குப் பிறகு தண்ணீரும் வரவில்லை கால்வாயை நிரந்தரம் ஆக்கவும் இல்லை. தற்போது சில வருடங்களாக தண்ணீர் வந்தாலும் அது குடிநீருக்கும் விவசாயத்திற்கு முழு அளவில் பயன்படவில்லை.
மற்ற கால்வாய்களில் தண்ணீர் திறக்கும் போதே இக்கால்வாயிலும் தண்ணீர் திறந்தால் மட்டுமே எங்களுக்கு முழு பயன் கிடைக்கும். கால்வாயை நிரந்தரமாக்க வலியுறுத்தி மனு கொடுத்தோம்.
இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இன்னும் சில நாட்களில் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டிவரும் நிலையில் கால்வாய் முழுவதும் முட்செடிகளும், புதர்களும் மண்டி மேடு பள்ளமாக உள்ளது.
கால்வாய்களை தூர்வாரி சீரமைத்தால் தான் திறந்து விடப்படும் தண்ணீர் கன்மாய்களுக்கு முறையாக சென்று சேரும், இல்லையென்றால் வீணாகிவிடும் என்றார்.