/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
/
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
ADDED : ஜூன் 01, 2024 04:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை அருகே ஆறாவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர்.
இவரது மனைவி பூமயில் 64., நேற்று வீடு அருகே உள்ள 15 அடி கிணற்றின் அருகில் நின்று கொண்டு இருக்கும் போது மூதாட்டி தடுமாறி கிணற்றுக்குள் விழுந்தார். தீயணைப்பு அலுவலர் சிவகுருநாதன் தலைமையில் மீட்பு குழுவினர் வந்து மூதாட்டியை மீட்டனர். சிறு காயங்களுடன் இருந்த மூதாட்டியை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.