/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஓய்வு அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு
/
ஓய்வு அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு
ADDED : ஜூன் 18, 2024 07:03 AM
சிவகங்கை, :சிவகங்கையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு நடைபெற்றது.
மாவட்ட தலைவர் திரவியம் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் வீரபாண்டியன் வரவேற்றார். முன்னாள் மாநில செயலாளர் ராபர்ட் துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் முகமது ரபிக் அறிக்கை ாசித்தார்.
மாவட்ட பொருளாளர் ஹக்கீம் வரவு செலவு அறிக்கை வாசித்தார். மாநில செயலாளர் முத்துராமலிங்கம் நிறைவுரை ஆற்றினார். மாவட்ட துணை தலைவர் அப்துல் அஜீஸ் நன்றி கூறினார்.
மாவட்ட நிர்வாகிகள் தனுஷ்கோடி, முகமது அப்துல் ரகீம், சங்கரசுப்பிரமணியன், ஜேசுமணி, சேது, அர்ச்சுணன் உள்ளிட்டோர் தீர்மானங்கள் குறித்து பேசினர்.
பழைய பென்ஷன் திட்டம் நிறைவேற்ற வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூ.9 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். 70 வயதினருக்கு 10 சதவீதம் பென்ஷன் உயர்த்தி வழங்க வேண்டும்.
மருத்துவ காப்பீடு திட்டத்தில் 100 சதவீத செலவு தொகையை வழங்க வேண்டும். மதுரை - தொண்டி இடையே அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என தீர்மானித்தனர். மாவட்ட நிர்வாகிகள் தேர்வில் செயலாளராக சங்கரசுப்பிரமணியன் தேர்வாகினார்.