/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நெற்குப்பையில் ரூ. 58 லட்சத்தில் ரோடு
/
நெற்குப்பையில் ரூ. 58 லட்சத்தில் ரோடு
ADDED : ஆக 03, 2024 04:53 AM
நெற்குப்பை: நெற்குப்பை பேரூராட்சியில் ரூ. 58 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் ரோடுகள் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்திற்கு சேர்மன் கே.பி.எஸ்.பழனியப்பன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் உமா மகேஸ்வரன்(பொ) முன்னிலை வகித்தார். வரவு செலவு கணக்குகளை இளநிலை உதவியாளர் சேரலாதன் வாசித்தார்.
தொடர்ந்து கவுன்சிலர்கள் நெற்குப்பை நகரில் மக்களின் எதிர்பார்ப்பான பத்திர பதிவு அலுவலகம், பஸ் ஸ்டாண்ட், உழவர் சந்தை, வணிக வளாகம் கொண்டு வருவது குறித்து தீர்மானம் நிறைவேற்றக் கோரினர்.
தொடர்ந்து பேரூராட்சிக்கு நிரந்தர வருவாய் ஈட்டும் வகையில் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் விரைவாக பரிசீலித்து பயனுள்ள இத்திட்டங்களை நிறைவேற்றிதர கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் நகரின் அனைத்து உட்புற சாலைகளுக்கும் ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலைகள் அமைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.