/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் அரிசி விலை உயர்வு: 2ம் போக நெல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
/
திருப்புத்துாரில் அரிசி விலை உயர்வு: 2ம் போக நெல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
திருப்புத்துாரில் அரிசி விலை உயர்வு: 2ம் போக நெல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
திருப்புத்துாரில் அரிசி விலை உயர்வு: 2ம் போக நெல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஏப் 18, 2024 06:22 AM

திருப்புத்துார்: திருப்புத்துார் பகுதியில் அரிசி விலை உயர்-வால் கிணற்று பாசன விவசாயிகள் இரண்டாம் போக நெல்சாகுபடியில் இறங்கியுள்ளனர்.
திருப்புத்துார் ஒன்றியத்தில் ஒரு போக நெல் விவசாயமே கேள்விக்குறியாக உள்ளது. காரணம் வானம் பார்த்த பூமி, மழையும் குறைவாக பெய்தது. சராசரி மழை பெய்தாலும், தேவையான நேரங்களில் பெய்யாதது. ஒரு பகுதியில் மட்டும் பெய்வது என்று பயனில்லாமல் போய் விட்டது. ஆறுகளிலும் நீர் வரத்தில்லாமல் போய் விட்டது. இதனால் கோடை வெப்பத்தில் கண்மாய்கள் வறண்டு கால்நடைகளுக்கே குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து வருகிறது.
இந்நிலையில் கிணற்று பாசன விவசாயிகள் பலரும் இரண்டாம் போக நெல்சாகுபடியில் இறங்கியுள்ளனர். காரணம் அரிசி விலை உயர்வு தான்.
திருப்புத்துார் ஒன்றியத்தில் 100 ஏக்கருக்கும் அதிகமாக இரண்டாம் போக நெல்சாகுபடியில் விவசாயிகள் இறங்கியுள்ளனர். வழக்கமாக மானாவாரி பயிராக கடலை,உளுந்து பயிரிடும் விவசாயிகள் கடும் வெயிலால் தற்போது தயக்கத்தில் உள்ளனர். இதனால் வேளாண் அலுவலகங்களில் உரம் விற்பனை குறைவாக உள்ளது.
இந்நிலையில் மூன்று ஏக்கரில் குண்டு ரக நெல் சாகுபடி செய்துள்ள செண்பகம்பேட்டை கே.தேவேந்திரன் கூறுகையில், சிறுகூடல்பட்டி கண்மாயிலிருந்து மடை இல்லாததால் கண்மாய் நீர் இங்கு வராது. மழைக் காலத்திலும் கிணற்று நீர் தான். தண்ணீர் பிரச்னையை விட தொழிலாளர் பற்றாக்குறை தான் அதிகமாக உள்ளது. 100 நாள் வேலை இருந்தால் வேலைக்கு ஆள் கிடைக்காது. கிடைத்தாலும் தொழி அடிக்க, நடவுக்கு ரூ 350, களை எடுக்க,மிதிக்க ரூ 300 என்று செலவாகிறது.
இப்போது அரிசி விலை அதிகரித்து கொண்டே செல்கிறது. அதனால் நெல்லுக்கு நல்ல விலை கிடைக்கும். அதனால் இரண்டாம் போகம் செய்ய ஆர்வம் உள்ளது. இல்லாவிட்டால் செலவுக்கும் வரவுக்கும் சமமாகத் தான் இருக்கும்' என்றார்.
கடுமையான வெப்பம், தொழிலாளர் பிரச்னையால் கிணற்று பாசனம் உள்ளவர்கள் இரண்டாம் போகம் சாகுபடி கோடையில் செய்வதில்லை. தற்போது அரிசி விலை உயர்வால் சிறுகூடல்பட்டி,செண்பகம்பேட்டை, அம்மாபட்டி,இளையாத்தங்குடி பகுதியில் கிணறு பாசன விவசாயிகள் உற்சாகமாக நெல்சாகுபடி செய்துள்ளனர்.

