/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இலவச கல்வி உரிமைச் சட்டம்: 2169 விண்ணப்பங்கள் தேர்வு
/
இலவச கல்வி உரிமைச் சட்டம்: 2169 விண்ணப்பங்கள் தேர்வு
இலவச கல்வி உரிமைச் சட்டம்: 2169 விண்ணப்பங்கள் தேர்வு
இலவச கல்வி உரிமைச் சட்டம்: 2169 விண்ணப்பங்கள் தேர்வு
ADDED : மே 31, 2024 06:24 AM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் 2169 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட மெட்ரிக் பள்ளிகள் கல்வி அலுவலர் தெரிவித்தார்.
தமிழகத்தில் குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 29 பிரிவு 121சியின் படி, அனைத்துத் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்கேஜி வகுப்பில்25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் ஆர்.டி.இ., திட்டத்தின் படி 2740 பேர் விண்ணப்பித்தனர். அதில் உரிய ஆவணம்இல்லாதவை, தகுதி இல்லாதவை என மொத்தம் 571 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
மீதமுள்ள 2169 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, மாவட்டத்திலுள்ள 138 தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கல்வி மெட்ரிக் பள்ளிகள் அலுவலர் சரவணகுமார் தெரிவித்தார்.