/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரோட்டை சேதமாக்கிய லாரி சிறைபிடிப்பு
/
ரோட்டை சேதமாக்கிய லாரி சிறைபிடிப்பு
ADDED : ஆக 05, 2024 07:05 AM

காரைக்குடி : காரைக்குடி அருகே தேவகோட்டை ரஸ்தாவில் ரோட்டை சேதமாக்கியதோடு, துாசியால் உணவுப் பொருட்கள் வீணாவதாக கூறி, அந்த ரோட்டில் சென்ற லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
காரைக்குடி அருகே தேவகோட்டை ரஸ்தா, நாகவயல் வழியாக கிராவல் மண் ஏற்றிக்கொண்டு லாரிகள் அடிக்கடி வந்து செல்கின்றன. இதனால் ரோடு சேதமாகின்றன. அதிவேகமாக செல்லும் லாரிகளால் துாசிகள் பரந்து, உணவு பொருட்களை வீணடிக்கிறது. மணல் லாரிகளால் மற்ற வாகனங்கள் இந்த ரோட்டில் செல்ல முடியவில்லை. அடிக்கடி இந்த ரோட்டில் செல்லும் மணல் லாரிகள் மோதி மின்கம்பங்கள் சேதமடைந்துவருகின்றன. இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.
அதிருப்தியில்நேற்று அந்த வழியாக வந்த மணல் லாரியை கிராமத்தினர் சிறைபிடித்தனர். போலீசாரின் சமரசத்திற்கு பின் போராட்டத்தை கைவிட்டுசென்றனர்.