ADDED : மே 10, 2024 11:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் தாலுகா அலுவலகம் செல்லும் ஒரு சாலை கரடு முரடாக பாதுகாப்பற்றதாக இருப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
இப்பேரூராட்சியில் கற்கடை ஐயனார் கோயில் அருகே தாலுகா அலுவலகம் கட்டப்பட்டது. இந்த அலுவலகத்திற்கு செல்ல இரண்டு பாதைகள் உள்ள நிலையில் ஒரு பாதை அங்குள்ள பாசனக் கால்வாய் கரையில் அமைந்துள்ளது.
இச்சாலையில் கற்கள் பெயர்ந்து கரடு முரடாகவும் சீமைக்கருவேல மரங்கள் பாதையை மறைத்து வளர்ந்துள்ளது. இதனால் இவ்வழியாக செல்பவர்கள் சிரமப்படுகின்றனர்.
குறிப்பாக டூவீலர்களில் செல்பவர்கள் தவறி கால்வாயில் விழும் அபாயம் உள்ளது. எனவே இச்சாலையை தார்சாலையாக மாற்ற அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.