ADDED : மார் 22, 2024 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள தேவகோட்டை ரஸ்தா பகுதியில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த திருவாடானை கருப்பையா மகன் அழகர் 50, என்பவரை சோதனை செய்தனர். அதில், ரூ.1.50 லட்சம் இருந்தது. உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பணத்தை பறிமுதல் செய்து காரைக்குடி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

