/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சக்திமாரியம்மன் கோயில் பால்குடம்
/
சக்திமாரியம்மன் கோயில் பால்குடம்
ADDED : மே 04, 2024 05:22 AM
சிவகங்கை: சிவகங்கை மருதுபாண்டியர் நகர் சக்திமாரியம்மன் கோயில் பூக்குழி உற்சவ விழாவை முன்னிட்டு நேற்று பால்குடம், பூக்குழி இறங்குதல் நடந்தது.இக்கோயிலில் ஏப்.26ல் கணபதி ேஹாமம், லட்சுமி பூஜை நடந்தது. அன்று மாலை 6:00 மணிக்கு காப்பு கட்டுதலுடன் பூக்குழி விழா தொடங்கியது. தினமும் அம்பாளுக்கு அபிேஷக ஆராதனை நடந்தது.
விழாவின் 8 ம் நாளான நேற்று காலை அம்மனுக்கு அபிேஷக, ஆராதனை நடந்தது. பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி, பறவைக்காவடி, சக்தி கரகம் எடுத்து நேர்த்தி செலுத்தினர். நேற்று மாலை கோயில் முன் அமைக்கப்பட்ட குண்டத்தில் பூக்குழி இறங்கினர். விழாவில் மருதுபாண்டியர் நகர் குடியிருப்பு மற்றும் சுற்றுப்புற பகுதி பக்தர்கள் பங்கேற்றனர்.