/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மடப்புரம் கோயில் அருகே மீன் கழிவால் சுகாதாரக்கேடு
/
மடப்புரம் கோயில் அருகே மீன் கழிவால் சுகாதாரக்கேடு
ADDED : மே 09, 2024 05:21 AM
திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரம் கோயிலுக்கு செல்லும் பாதையில் மீன் கழிவுகளை அப்படியே கொட்டி செல்வதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று. தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். கோயிலுக்கு செல்லும் வழியில் மடப்புரம் விலக்கில் பத்திற்கும் மேற்பட்ட மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
காலை முதல் மாலை வரை செயல்படும் இக்கடைகளில் மீன்களை சுத்தம் செய்த பின் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் ஆங்காங்கே கொட்டி செல்கின்றனர். கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதுடன் தெருநாய்களும் வலம் வருகின்றன.
இப்பாதையை கடந்து தான் அரசு ஆண்கள் பள்ளிக்கு மாணவர்கள் தினமும் சென்று வருகின்றனர். கழிவுகளை உண்ணும் நாய்கள் அப்பகுதியை கடக்கும் மாணவர்களையும் விரட்டி கடித்து துன்புறுத்துகின்றன. பலமுறை புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே மாவட்ட நிர்வாகம் கழிவுகளை கொட்டும் மீன் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.