/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சங்கராபுரம் என்.ஜி.ஓ., காலனி ரோடு சேதம்
/
சங்கராபுரம் என்.ஜி.ஓ., காலனி ரோடு சேதம்
ADDED : மார் 09, 2025 05:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: சங்கராபுரம் ஊராட்சிக்குட்பட்ட என்.ஜி.ஓ., காலனியில் 10க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளன. இதில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
தற்போது சட்டக்கல்லுாரி, பத்திரப்பதிவு அலுவலகம், தீயணைப்பு நிலையம், வட்டாரப் போக்குவரத்து பகுதிநேர அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இப்பகுதியில் அமைந்துள்ளது. பல்வேறு பகுதி மக்கள் அலுவலகங்களுக்கு செல்ல இச்சாலையை பயன்படுத்துகின்றனர். இந்த சாலை சேதமடைந்து கற்சாலையாக காட்சியளிக்கிறது. வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.