ADDED : ஜூலை 24, 2024 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை எஸ்.பி., அலுவலகத்தில் தனிப்படை போலீசாருக்கு பாராட்டு நிகழ்ச்சி நடந்தது.
கொல்லங்குடியில் நடந்த இரட்டை கொலையில் குற்றவாளிகளை கைது செய்த எஸ்.ஐ., ஹரிகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை, திருப்புத்துார் உட்கோட்ட போலீஸ் ஸ்டேஷனில் கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடை குற்றவாளிகளை கைது செய்த சிங்கம்புணரி எஸ்.ஐ., ராஜவேல் தலைமையிலான தனிப்படை, திருப்பாச்சேத்தி சிறப்பு எஸ்.ஐ., நாகராஜன் தலைமையிலான தனிப்படை, காரைக்குடி தெற்கு ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார், எஸ்.ஐ.,கள் கலைமணி, பிரணிதா தலைமையிலான தனிப்படை உள்ளிட்ட 48 போலீசாரை பாராட்டி எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.