/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் தபால் கார்டு தட்டுப்பாடு
/
காரைக்குடியில் தபால் கார்டு தட்டுப்பாடு
ADDED : ஜூலை 29, 2024 12:00 AM
காரைக்குடி : காரைக்குடி பகுதியில் உள்ள போஸ்ட் கார்டு கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
காரைக்குடி தலைமை போஸ்ட் ஆபிசின் கீழ் 24 போஸ்ட் ஆபிஸ் செயல்படுகிறது. பொதுமக்கள் குறைந்த செலவில் தங்களது தகவலை அனுப்பி வைக்க போஸ்ட் கார்டு பெரிதும் பயன்பட்டு வந்தது. தொலைத் தொடர்பு சார்ந்த பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து உள்ள நிலையில் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் பெரிதும் உதவியாக 50 காசு கார்டு கிடைத்து வந்தது.
தற்போது வரை பொதுமக்கள் உறவினர்களுக்கு தகவல்களை தெரிவிக்க போஸ்ட் கார்டுகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். தவிர அரசுத்துறை சார்ந்த நிறுவனங்கள் கல்வி நிறுவனங்கள் வங்கிகள் உட்பட பல நிறுவனங்களும் போஸ்ட் கார்டில் தற்போது வரை அதிகம் பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் காரைக்குடி சுற்றுவட்டாரத்தில் 50 காசு கார்டு கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வருவதாக புகார் எழுந்து வருகிறது.
இதனால் கிராமப்புற பகுதிகளில் தினமும் போஸ்ட் கார்டு உள்ளதா என மக்கள் அலைந்து திரிகின்றனர்.
அஞ்சல் துறையினர் போஸ்ட் கார்டு கட்டுப்பாட்டை நீக்கி முறையாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.