நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை; சிவகங்கை பாலமுருகன் நர்சரி மற்றும் ஆரம்ப பள்ளி ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் ஆர்த்தி வரவேற்றார். பள்ளி நிர்வாகி குமார் முன்னிலை வகித்தார்.
சுவாமி விவேகானந்தா பள்ளி தாளாளர் சங்கரன், துணை தாசில்தார் கமலக்கண்ணன், முகமது சித்திக் மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். விழாவில் சிவகங்கை ஆக்ஸ்வர்ட் பள்ளி நிறுவனர் சியாமளா, அழகிச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியை யோகேஸ்வரி, புனித மைக்கேல் மெட்ரிக் பள்ளி ஆசிரியை ஆரோக்கியநித்யகலா ஆகியோருக்கு சாதனையாளர் விருது வழங்கினர்.
சிறந்த ஆசிரியர்களாக புவனேஸ்வரி, அக்சயா, சிறந்த மாணவர்களாக சாய்சபரிஷ், தர்ஷன் தேர்வு செய்யப்பட்டு பரிசளிக்கப்பட்டது.

