நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக்., பள்ளி ஆண்டு, விருது வழங்கும் விழா நடந்தது. சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி டாக்டர்கள் சிவசங்கர், சுவாதி பங்கேற்றனர்.
வித்யா கிரி கல்வி நிறுவன முதன்மை நிர்வாக அதிகாரி ஐஸ்வர்யா வரவேற்றார். முதல்வர் ஹேமமாலினி ஆண்டறிக்கை வாசித்தார்.
நிகழ்ச்சியில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. பள்ளி தலைவர் கிருஷ்ணன், தாளாளர் சுவாமிநாதன், பொருளாளர் முகமது மீரா பங்கேற்றனர்.
துணை முதல்வர் சத்திய மூர்த்தி நன்றி கூறினார்.