ADDED : ஆக 05, 2024 10:24 PM
திருப்புத்துார், - திருப்புத்துார் ஆ.பி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு ஆயத்தக்கூட்டம் நடந்தது.
பள்ளித் தலைமை ஆசிரியர் பா.தவமணி தலைமை வகித்தார். வட்டாரவளமைய ஆசிரியப் பயிற்றுனர் பாண்டிச்செல்வி முன்னிலை வகித்தார். ஆசிரியர் முத்துப்பாண்டி பள்ளிமேலாண்மைக்குழு குறித்தும், அதன் மறுகட்டமைப்பினை அமைப்பது குறித்தும் விளக்கினார். பெற்றோர்களுக்கு மாணவர்களின் பண்புகளை நெறிப்படுத்திடவும், கல்வித்திறன் குறித்தும், ஆசிரியருடன் கலந்தாய்வு மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது.
அக், 24 ல் நடைபெறும் மேலாண்மைக்குழு நிர்வாகிகள் தேர்வில் அனைத்து பெற்றோர்கள் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டது. பள்ளியின் முன்னேற்றம், தேர்ச்சி, ஒழுக்கம் பற்றியும் பெற்றோர்கள் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினர். முன்னாள் பள்ளி மேலாண்மைக்குழுவினர் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.