ADDED : செப் 03, 2024 05:57 AM
சிவகங்கை, : கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடந்தது.
தலைமை ஆசிரியர் தெய்வானை தலைமை வகித்தார். ஆசிரியர் ஆரோக்கியசாமி வரவேற்றார். கூட்டத்தில் தலைவராக நித்யா, துணைத் தலைவியாக லட்சுமி மற்றும் உறுப்பினர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
ஆசிரியர்கள் ராஜபாண்டி, கமலம்பாய், வாசுகி, மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் மீனாட்சி நன்றி கூறினார்.
தேவகோட்டை: மங்களம் அரசு நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு சீரமைப்பு கூட்டம் வெங்களூர் ஊராட்சி தலைவர் அண்ணாத்துரை தலைமையில் நடந்தது.
தலைமையாசிரியர் கவிதா வரவேற்றார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றி செல்வி பார்வையாளராக பங்கேற்றார்.
புதிய தலைவர் இலக்கியா, துணை தலைவர் ராதா, பெற்றோர் 12 பேரும், உள்ளாட்சி பிரதிநிதி, ஒருங்கிணைப்பாளர் முன்னாள் மாணவர்கள், முன்னாள் மாணவ உறுப்பினர் சுரேஷ், இல்லம் தேடி கல்வி உறுப்பினர் ராசாத்தி, சுய உதவி குழு உறுப்பினர் என 24 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.ஆசிரியை பாண்டிச்செல்வி நன்றி கூறினார்.