/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விதைப்பண்ணை அமைப்பு இணை இயக்குனர் தகவல்
/
விதைப்பண்ணை அமைப்பு இணை இயக்குனர் தகவல்
ADDED : செப் 04, 2024 12:48 AM
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட விவசாயிகள் விதைப்பண்ணை அமைக்க வேண்டும் என வேளாண்மை இணை இயக்குனர் லட்சுமி பிரபா தெரிவித்தார். அவர் கூறியதாவது:
மாவட்ட அளவில் வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் ஆண்டு தோறும் நெல் 500, சிறுதானியம் 10, பயறு வகை 35, நிலக்கடலை 40 டன் வீதம் வழங்கப்படுகிறது. ஆராய்ச்சி நிலையங்கள் மூலம் பெறப்படும் வல்லுநர் விதைகள் அரசு விதை பண்ணையில் ஆதார விதையாக உற்பத்தி செய்து, பின்பு முன்னோடி விவசாயிகள் வயலில் சான்று விதை உற்பத்தி செய்யப்படுகிறது. ஜெ.ஜி.எல்., பி.பி.டி., ஆர்.என்.ஆர்., என்.எல்.ஆர்., ரகத்திற்கு ரூ.35, சன்னரகம் ரூ.34, ராகி கிலோ ரூ.41, குதிரை வாலி ரூ.59, உளுந்து, நிலக்கடலை ரூ.105, எள் ரூ.167 க்கு விதைப்பண்ணை அமைத்த விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும் 10 ஆண்டிற்கு உட்பட்ட ரகங்களுக்கு நெல் ரூ.10, உளுந்து, கடலைக்கு ரூ.15 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆர்.என்.ஆர்., தேவகோட்டை, காளையார்கோவில், இளையான்குடியில் அதிக வரவேற்பு இருப்பதால் கொள்முதல் அதிகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
மேலும் ஆதிதிராவிடர், பழங்குடி விவசாயிகள் இந்த ஆண்டு அதிகளவில் விதைப்பண்ணை அமைத்து பயனடைய இலக்கு நிர்ணயித்துள்ளோம், என்றார்.