ADDED : ஜூலை 31, 2026 04:20 PM
அ நிறம் | அளவு
தேவகோட்டை,ஆக.1 -
தேவகோட்டை தோட்டக்கலை உதவி இயக்குநர் பெப்பின் இளம்பரிதி கூறியது: ஆடி மாதத்தில் தோட்டக்கலை துறை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் ஆடி பட்ட காய்கறி விதை தொகுப்பு இவ்வாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தொகுப்பில் தக்காளி, கத்தரி, வெண்டை , மிளகாய் ,கீரை, பீர்க்கு, பூசணி, சுரைக்காய் ஆகிய விதைகள் அடங்கிய தொகுப்பு ரூ 50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.தேவைப்படுவோர் விதை தொகுப்புக்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
