/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தமிழகத்தில் மோசமான ஆட்சி சீமான் குற்றச்சாட்டு
/
தமிழகத்தில் மோசமான ஆட்சி சீமான் குற்றச்சாட்டு
ADDED : ஆக 15, 2024 01:44 AM

திருப்புவனம்:சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்திற்கு வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகத்தில் மோசமான ஆட்சி நடப்பதாக குற்றம் சாட்டினார்.
நாம் தமிழர் கட்சி முன்னாள் பொதுச்செயலாளர் தடா சந்திசேகர் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியில் அஞ்சலி செலுத்தியபின் சீமான் பேசியது: தமிழகத்தில் மோசமான ஆட்சி நடைபெறுகிறது. சவுக்கு சங்கருக்கு கஞ்சா கொடுத்தேன் என்று யாரோ ஒருவர் சொன்னால் சவுக்கு சங்கர் மேல கஞ்சா வழக்கு போடுகிறார்கள். கஞ்சா வழக்கு போட்டால் கஞ்சா ஒழிந்து விடுமா. தமிழக அரசு மது விற்பனை செய்கிறது. யார் மேல் வழக்கு போடுவது.
சீமானுக்கு யாராவது கொடுத்தேன்னு சொன்னா கஞ்சா வழக்கு போடுவீர்களா. என் மீது 148 வழக்குகள் உள்ளன. ரூ.1000 உதவித் தொகைன்னு சொல்லிட்டு 1 முதல் பிளஸ் 2 வரை பாட புத்தகங்கள் விலையை உயர்த்தியுள்ளனர். தலித் தமிழக முதல்வராக முடியாது என்ற திருமாவளவன் கருத்தை வரவேற்கிறேன். ஏன் தாழ்த்தப்பட்டவர்களை கல்வி அமைச்சராக நியமிக்க கூடாதா. உங்கள் குடும்பத்தில் இருந்து வந்தால் தான் துணை முதல்வராக முடியுமா. இவ்வாறு அவர் பேசினார்.