/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பத்திர பதிவு அலுவலகத்தில் ரூ.72 ஆயிரம் பறிமுதல்
/
பத்திர பதிவு அலுவலகத்தில் ரூ.72 ஆயிரம் பறிமுதல்
ADDED : ஆக 07, 2024 10:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:மதகுபட்டி பத்திர பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி கணக்கில் வராத பணம் ரூ.72 ஆயிரத்தை கைப்பற்றினர்.
சிவகங்கை அருகே உள்ள மதகுபட்டி பத்திரபதிவு அலுவலகத்தில் டி.எஸ்.பி., ஜான் பிரிட்டோ தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜேசுதாஸ், எஸ்.ஐ., ராஜாமுகமது உள்ளிட்ட போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு வேலை பார்க்கும் ஒருவரிடம் இருந்து ரூ.1500 அலுவலகத்தில் ஒரு அறையில் ரூ.71 ஆயிரத்து 230ம் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். பணத்திற்கு உரிய கணக்கு இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.