ADDED : ஜூலை 23, 2024 05:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி அருகே கோ.பாலையூரில் மாநில அணியில் விளையாட கால்பந்துவீரர்கள் தேர்வு நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட கால்பந்தாட்டகழகம் சார்பில் சப்- ஜூனியர் பிரிவுக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கு தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். செயலாளர் அருணாசலம் முன்னிலை வகித்தார். தமிழக அளவில் இருந்து 13 வயதிற்கு உட்பட்ட 500 வீரர்கள் பங்கேற்றனர். இதில், தேர்வு செய்யப்படும் 21 வீரர்கள் தேசிய அளவிலான போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்பார்கள்.