ADDED : ஆக 08, 2024 04:39 AM
மானாமதுரை: மானாமதுரை சுற்றுவட்டார கிராம பகுதிகளில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழு தனித்தனியாக பிரிந்து டூவீலர்களில் பிரபல கம்பெனிகளின் பெயர்களைக் கொண்ட போலி மின்சாதன பொருட்களான மிக்ஸி, கிரைண்டர், ஹோம் தியேட்டர் உள்ளிட்ட பொருட்களுக்கு டோக்கன் கொடுத்து குலுக்கல் முறையில் பொருட்கள் விழுந்தால் குறைந்த விலைக்கு தருவதாக விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
நேற்று மானாமதுரை அருகே நத்தபுரக்கி கிராமத்தில் உத்திர பிரதேச மாநிலம் முர்சாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த நவ்பகார், முக்தமீம் ஆகியோர் போலியான மின்சாதன பொருட்களை விற்பனை செய்வதாக கூறி கிராம மக்கள் அவர்களை பிடித்து மானாமதுரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் மேற்கண்ட இரண்டு பேரையும் அவர்கள் கொண்டு வந்த பொருட்களையும் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.