/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பத்து ரூபாய்க்கு அன்னாசிபழம் விற்பனை
/
பத்து ரூபாய்க்கு அன்னாசிபழம் விற்பனை
ADDED : ஜூலை 02, 2024 09:59 PM

திருப்புவனம்: திருப்புவனத்தில் நேற்று பத்து ரூபாய்க்கு அன்னாசி பழம் விற்பனை செய்ததால் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
கேரளாவில் இருந்து அதிகளவு அன்னாசி பழங்கள் கொண்டு வரப்பட்டு தமிழகத்தில் விற்பனை செய்யப்படுகிறது. டிசம்பர் கடைசியில் தொடங்கி ஜூலை வரை விற்பனை இருக்கும். குளிர்காலம் தொடங்கி வெயில் காலம் வரை அன்னாசி பழங்கள் விற்பனை இருக்கும். 650 கிராம் எடை கொண்ட ஒரு பழம் பழக்டைகளில் 30 முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று திருப்புவனம், திருப்பாச்சேத்தி என தொடர்ச்சியாக அடுத்தடுத்து வாரச்சந்தை நடைபெற உள்ளதால் வியாபாரிகள் மொத்தமாக பழங்களை வாங்கி வந்து சந்தைகளில் ஒரு பழம் 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விலை வைத்து விற்பனை செய்கின்றனர். திருப்புவனத்தில் அன்னாசி பழங்கள் விலை குறைவாக விற்பனை செய்யப்பட்டதால் குறைந்த நேரத்தில் அனைத்து பழங்களும் விற்று தீர்ந்து விட்டன.
வியாபாரிகள் கூறுகையில்: இந்த வருடம் கேரளாவில் விளைச்சல் அதிகம், கிலோ 8 ரூபாய்க்கு வாங்கி வந்து சில்லறையில் விற்பனை செய்கிறோம் என்றனர்.