நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி : இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி அறிவியல் கழகம் மற்றும் கல்லூரி உள் தர உறுதி செல் ஆகியவற்றின் சார்பில் அறிவியல் பயிலும் மாணவர்கள் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளல் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
துணைமுதல்வர் முஸ்தாக் அகமது கான் வரவேற்றார். முதல்வர் ஜபருல்லாகான் தலைமை தாங்கினார். விருதுநகர் காமராஜர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி உயிரி தொழில்நுட்ப துறை உதவிப்பேராசிரியை பிரதிபா மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கு தயார்செய்தல் முறை குறித்து பேசினார்.கழக இணை ஒருங்கிணைப்பாளர் காஜாமுஹைதீன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கழக ஒருங்கிணைப்பாளர் ரோஷன் ஆரா பேகம் செய்திருந்தார்.