/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
புதுவயலில் கோயில் அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்; சாக்கோட்டை மக்கள் எதிர்ப்பு
/
புதுவயலில் கோயில் அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்; சாக்கோட்டை மக்கள் எதிர்ப்பு
புதுவயலில் கோயில் அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்; சாக்கோட்டை மக்கள் எதிர்ப்பு
புதுவயலில் கோயில் அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்; சாக்கோட்டை மக்கள் எதிர்ப்பு
ADDED : ஜூலை 17, 2024 12:00 AM

காரைக்குடி : புதுவயல் பேரூராட்சியில் கோயில் அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாக்கோட்டை மக்கள் நேற்று பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.
புதுவயல் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.5.70 கோடி மதிப்பீட்டில் கசடுக்கழிவு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 5 ஏக்கரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. சுத்திகரிப்பு நிலையம் அமையவுள்ள இடத்தில் கோயில் மற்றும் குடியிருப்பு பகுதி உள்ளதாகவும், சில வார்டுகள் மட்டுமே இதன் மூலம் பயன்பட முடியும் எனக் கூறி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று,
சாக்கோட்டை பகுதி மக்கள் நேற்று பேரூராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
சண்முகம் கூறுகையில்:
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த இடத்தின் அருகில் வீரசேகர உமையாம்பிகை கோயில் மற்றும் குளங்கள் உள்ளது. குடியிருப்புகளும் உள்ளது.
இங்கு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறும். எனவே சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். மாற்றம் செய்யாவிட்டால் போராட்டம் நடத்துவோம்.
பேரூராட்சி தலைவர் முகமது மீரா கூறுகையில்:
புதுவயல் பேரூராட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரூ 5.70 கோடி மதிப்பீட்டில் பணி தொடங்க இருந்த நிலையில் சாக்கோட்டை பகுதி மக்கள் வேறு இடத்தில் சுத்திகரிப்பு நிலையத்தை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இடமாற்றம் செய்வது குறித்து பரிசீலினை செய்வதாக தெரிவித்துள்ளோம் என்றார்.