/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சி்ங்கம்புணரி அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை பற்றாக்குறை
/
சி்ங்கம்புணரி அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை பற்றாக்குறை
சி்ங்கம்புணரி அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை பற்றாக்குறை
சி்ங்கம்புணரி அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை பற்றாக்குறை
ADDED : மே 26, 2024 04:11 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்போது 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி வளாகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வகுப்பறை கட்டடங்கள் பழுதடைந்ததால் இடிக்கப்பட்டது.
இதனால் 5 வகுப்புகளின் மாணவர்களுக்கு போதிய வகுப்பறை இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
திறந்த வெளியிலும் இட நெருக்கடிக்கு மத்தியிலும் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்படுகிறது. இது தவிர அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு பரிசோதனை கூடங்களும், நூலக கட்டடமும் பள்ளியில் இல்லை. கோடை விடுமுறை முடிந்து சில தினங்களில் பள்ளிகள் துவங்கவுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் போதிய வகுப்பறை கட்டடங்களையும், நூலகம் பரிசோதனைக் கூடங்களையும் கட்டித் தர பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.