/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு மருத்துவமனையில் பணியாளர்கள் தட்டுப்பாடு
/
அரசு மருத்துவமனையில் பணியாளர்கள் தட்டுப்பாடு
ADDED : செப் 12, 2024 04:52 AM
சிவகங்கை: mசிவகங்கை அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் பற்றாக்குறையால் மருத்துவமனை பராமரிப்பு, நோயாளிகளுக்கு உணவு வழங்குதல் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு தினமும் 800க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற வருகின்றனர். உள் நோயாளிகளாகவும் பலர் சிகிச்சை பெறுகின்றனர். 200க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பணிபுரிகின்றனர்.
மருத்துவமனை நிர்வாக பணிகளில் எலக்ட்ரீசியன், சமையலர், சலவைத் தொழிலாளி, பிளம்பர் என 30 பணியிடங்கள் உள்ளன. தற்போது 6 பேர் பதவி உயர்வு பெற்று சென்று விட்டனர். 10க்கும் மேற்பட்ட பணியிடம் காலியாக உள்ளது.
ஒப்பந்த ஊழியர்கள் 300 பேர் மருத்துவமனையில் பல்நோக்கு பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தான் காவல் பணி, மருந்து சீட்டு கொடுப்பது, சமையலர் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர்.மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கூடுதலாக பல்நோக்கு பணியாளர்களை அரசு பணியமர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மருத்துவக் கண்காணிப்பாளர் சிவக்குமார் கூறுகையில், அனைத்து பணிகளுக்கும் பணியாளர் இருக்கின்றனர். சலவை தொழில் பணியிடம் மட்டும் காலியாக உள்ளது. அவற்றை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.