/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி சூடாமணிபுரத்தில் மாநகராட்சி பூங்காக்களில் புதர்கள்
/
காரைக்குடி சூடாமணிபுரத்தில் மாநகராட்சி பூங்காக்களில் புதர்கள்
காரைக்குடி சூடாமணிபுரத்தில் மாநகராட்சி பூங்காக்களில் புதர்கள்
காரைக்குடி சூடாமணிபுரத்தில் மாநகராட்சி பூங்காக்களில் புதர்கள்
ADDED : ஆக 26, 2024 05:34 AM

காரைக்குடி:
காரைக்குடி மாநகராட்சி, சூடாமணிபுரத்தில் அம்ரூத் திட்டத்தில் 2016ல் ரூ.63 லட்சத்தில் கட்டிய மூன்று பூங்காக்கள் உரிய பராமரிப்பின்றி, புதர்கள் மண்டிக் கிடப்பதால், பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர்.
இம்மூன்று பூங்காக்களில் சிறுவர்கள் விளையாட்டு திடல், செயற்கை நீரூற்று, புல்வெளி, நடைபாதை, பயிற்சி இடம் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டது. தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் இப்பூங்காக்களை பராமரிக்காமல் விட்டுவிட்டது. இதனால், மரம், செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இரவில் பூங்காவிற்குள் மின்விளக்கு எரிவதில்லை. இதனால், சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருகின்றன.
சூடாமணிபுரம் பாண்டியன் கூறியதாவது: பூங்கா கட்டிய போது, பராமரிப்பு பணிக்காக ஒவ்வொரு பூங்காவிற்கும் இரண்டு ஊழியர்களை நியமித்திருந்தனர். தற்போது ஒருவர் மட்டுமே பணி செய்கிறார். இதனால், பூங்கா சீரமைப்பு பணிகளின்றி புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால், ஒருவித அச்சத்துடன் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது. பூங்காக்கள் மட்டுமின்றி சூடாமணிபுரத்தில் உள்ள 21 வீதிகளிலும் முட்புதர்கள் மண்டிக் கிடக்கின்றன, என்றார்.

