/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரி சிவபுரிபட்டி கோயில் ரோடு போக்குவரத்தால் ஸ்தம்பிப்பு
/
சிங்கம்புணரி சிவபுரிபட்டி கோயில் ரோடு போக்குவரத்தால் ஸ்தம்பிப்பு
சிங்கம்புணரி சிவபுரிபட்டி கோயில் ரோடு போக்குவரத்தால் ஸ்தம்பிப்பு
சிங்கம்புணரி சிவபுரிபட்டி கோயில் ரோடு போக்குவரத்தால் ஸ்தம்பிப்பு
ADDED : செப் 09, 2024 05:54 AM

சிங்கம்புணரி ; சிங்கம்புணரி அருகே முகூர்த்த நாட்களில் சிவபுரிபட்டி கோயில் பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பிப்பதால் வாகன நிறுத்துமிடம் உருவாக்க கோரிக்கை எழுந்துள்ளது.
சிவபுரிபட்டி ஊராட்சியில் சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயில் உள்ளது. முகூர்த்த காலங்களில் சுற்றுவட்டார கிராம மக்கள் இக்கோயிலில் தான் திருமண வைபவங்களை நடத்துகின்றனர். தற்போது பெரும்பாலான மக்கள் கோயிலில் தாலி கட்டும் வைபவத்தை நடத்திவிட்டு வரவேற்பை வீடு, மண்டபங்களில் நடத்திக் கொள்கின்றனர்.
இதனால் நாளுக்கு நாள் முகூர்த்த நாட்களில் கூட்டம் அலைமோதுகிறது. கார், வேன், லாரிகளில் திருமண வீட்டார் வருவதால் கோயிலில் இருந்து சிவபுரிபட்டி விலக்கு தாண்டி காரைக்குடி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலால் சிக்கி கொள்கின்றன. ரோட்டில் அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் காரைக்குடி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கிறது.
மேலும் மட்டிக்கரைப்பட்டி, சிவபுரிபட்டி, குமரத்தகுடிப்பட்டி பகுதியை சேர்ந்த மக்கள் கிராமத்தை விட்டு சிங்கம்புணரிக்கு வர முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது. இதனால் அவர்கள் 10 கி.மீ., தூரம் சுற்றி செல்கின்றனர். போக்குவரத்து போலீசார் இங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.