ADDED : ஜூன் 23, 2024 03:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய தலைவர் திவ்யா பிரபு தலைமையில் நடந்தது. பி.டி.ஓ., ராஜேந்திரகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகநாதசுந்தரம் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 37 லட்ச ரூபாய் மதிப்பில் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவது உள்ளிட்ட 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஒன்றியக் குழு துணைத் தலைவர் சரண்யா ஸ்டாலின், கவுன்சிலர்கள் கலைச்செல்வி, ரம்யா, பெரியகருப்பி, சத்தியமூர்த்தி, சசிகுமார், இளங்குமார், உதயசூரியன் பங்கேற்றனர்.