/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரசாரம் சிவகங்கை, குன்றக்குடியில் நிறைவு
/
சிவகங்கை வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரசாரம் சிவகங்கை, குன்றக்குடியில் நிறைவு
சிவகங்கை வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரசாரம் சிவகங்கை, குன்றக்குடியில் நிறைவு
சிவகங்கை வேட்பாளர்கள் இறுதி கட்ட பிரசாரம் சிவகங்கை, குன்றக்குடியில் நிறைவு
ADDED : ஏப் 18, 2024 06:23 AM
சிவகங்கை: சிவகங்கை தொகுதி வேட்பாளர்கள் நேற்று மாலை 6:00 மணிக்கு இறுதி கட்ட பிரசாரத்தை சிவகங்கை, குன்றக்குடியில் முடித்தனர்.
* சிவகங்கை லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் தேவநாதன் நேற்று மாலை 6:00 மணிக்கு சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் பிரசாரம் செய்தார். முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, பா.ஜ., மாவட்ட தலைவர் சத்தியநாதன், தேசிய பொதுக்குழு சொக்கலிங்கம், மாவட்ட பொது செயலாளர் மார்த்தாண்டன், ஏ.நாகராஜன், துணை தலைவர் சுகனேஸ்வரி, நகர் தலைவர் உதயா, பொது செயலாளர்கள் பாலா, சதீஷ் பங்கேற்றனர்.
* காங்., வேட்பாளர் கார்த்தி குன்றக்குடியில் பிரசாரத்தை நிறைவு செய்தார். அவரது மனைவி ஸ்ரீநிதி, தி.மு.க., மாவட்ட துணை தலைவர் ஜோன்ஸ் ரூசோ, ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியன், ஆனந்தன், காங்., ஒன்றிய கவுன்சிலர் அழகப்பன் பங்கேற்றனர். கட்சியினர் கார்த்தி எம்.பி.,க்கு வெள்ளி வேல் பரிசு அளித்தனர். ஒவ்வொரு தேர்தலிலும் கார்த்தி எம்.பி., பிள்ளையார்பட்டியில் பிரசாரத்தை துவக்கி, குன்றக்குடியில் நிறைவு செய்வார்.
* அ.தி.மு.க., வேட்பாளர் சேவியர்தாஸ் சிவகங்கை சிவன் கோயிலில் இருந்து பிரசார வாகனத்தில் நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று, மீண்டும் சிவன் கோயிலில் பிரசாரத்தை நிறைவு செய்தார். தொகுதி பொறுப்பாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் வைரமுத்து, ஒன்றிய செயலாளர்கள், நகர் செயலாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அ.தி.மு.க., வேட்பாளர்களும் ஒவ்வொரு முறையும் சிவகங்கை சிவன் கோயிலில் பிரசாரத்தை துவக்கி, இங்கே நிறைவு செய்வார்கள்.
* நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசி நகரின் முக்கிய வீதிகளில் தேர்தல் பிரசாரம் செய்து, மாலை 6:00 மணிக்கு அரண்மனைவாசலில் நிறைவு செய்தார். பின்னர் வேலுநாச்சியார் சிலை முன் உறுதி மொழி எடுத்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் இளஞ்செழியன், மாவட்ட செயலாளர் குகன்மூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் கார்த்தி, ராஜ்குமார், நகர் செயலாளர் அமரன்கார்த்தி பங்கேற்றனர். இவர்கள் உட்பட சுயேச்சைகள் 16 பேரும் பிரசாரத்தை நிறைவு செய்தனர்.

