/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை அரசு மருத்துவமனை துாய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
/
சிவகங்கை அரசு மருத்துவமனை துாய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
சிவகங்கை அரசு மருத்துவமனை துாய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
சிவகங்கை அரசு மருத்துவமனை துாய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : மே 28, 2024 04:09 AM

சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துாய்மை பணியாளர் மற்றும் காவலர்கள் சம்பள உயர்வு, சம்பள உயர்வுக்கான நிலுவை தொகை வழங்க வலியுறுத்தி நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இங்கு, ஒப்பந்த அடிப்படையில் துாய்மை பணியாளர், காவலர் என 299 பேர் பணிபுரிகின்றனர். மாதம் ரூ.11,500 சம்பளத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு ஆண்டுதோறும் சம்பள உயர்வு, பி.எப்., பணமும் பெற்று வந்தனர்.
கடந்த 6 மாதமாக இவர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள உயர்வு, நிலுவை தொகை வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன.
இதை கண்டித்து நேற்று காலை மருத்துவமனை வளாகத்தில் துாய்மை பணியாளர், காவலர்கள் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களிடம் மருத்துவமனை கண்காணிப்பாளர்குமாரவேலு, உதவிநிலைய மருத்துவ அலுவலர் தென்றல், தனியார் நிறுவன மேலாளர் முருகேசன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். இதனால், 4 மணி நேரம் மருத்துவமனையில் அடிப்படை பணிகள் பாதிக்கப்பட்டன.
இது குறித்து மேலாளர் முருகேசன் கூறியதாவது:
பி.எப்., நிதி கடந்த ஏப்ரல் வரை விடுவித்து விட்டோம். இத்தொகை கிடைக்காததற்கு ஊழியர்களின் ஆதார் உள்ளிட்ட விபரம் முழுமையாக இல்லை. ஒப்பந்த படி இவர்களுக்கு வார விடுமுறை வழங்க முடியாது.