/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் ரோட்டில் ஓடும் பாதாள சாக்கடை கழிவு நீர்; பொதுமக்கள் அவதி

ADDED : ஜூன் 11, 2024 11:02 PM

சிவகங்கை : சிவகங்கை நகராட்சி 7 வார்டு வேலாயுத சுவாமி கோயில் அருகே பாதாள சாக்கடையில் கழிவு நீர் நிரம்பி வெளியேறி ரோட்டில் ஓடுவதால் அப்பகுதி மக்கள் சிரமப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை நகராட்சி 6,7 வார்டு சந்திப்பில் உள்ளது வேலாயுதசாமி கோயில் தெரு.
இந்த பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இரு வார்டுகளும் சந்திக்கும் இடத்தில் காமாட்சி அம்மன் தெரு உள்ளது. இந்த பகுதியில் பாதாள சாக்கடை நிரம்பிகழிவுநீர் அனைத்தும் ரோட்டில் ஓடுகிறது. ரோட்டில் தேங்கியிருக்கும் கழிவு நீரால் துர்நாற்றம் வீசி நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மகாலிங்கம் கூறுகையில், கடந்த ஒரு மாதமாக கழிவுநீர் ரோட்டில் செல்கிறது. இதுகுறித்து நகராட்சியில் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.கழிவு நீர் வீட்டை சூழ்ந்துள்ளது. வெளியே செல்ல முடியவில்லை. துர்நாற்றம் வீசி மூச்சுதிணறல் ஏற்படுகிறது.
இரவு நேரங்களில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. நிம்மதியாக துாங்க முடியவில்லை.நகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை அடைப்பை நீக்கி முறையாக கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.