/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கல்லுாரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
/
கல்லுாரி மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : ஆக 08, 2024 04:50 AM

சிவகங்கை: சிவகங்கை ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் இன்ஜினியரிங், பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்களிடம் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தும் விதமாக திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் கவிதப்பிரியா தலைமை வகித்தார். மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் கண்ணன் அரசின் நிதி திட்டங்கள் குறித்து பேசினார்.
தொழில் முனைவோர் மேம்பாடு, புத்தாக்க நிறுவன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருமைஜோசப் வரவேற்றார். முதன்மை பயிற்றுநர் அருண்குமார் விளக்கினார். ராமநாதபுரம் ஒருங்கிணைப்பாளர் பொன்வேல் முருகன் நன்றி கூறினார்.
திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளுடன் பங்கேற்றனர். இக்கண்டுபிடிப்பு அனைத்தும் புதிய தொழில் முனைவோர்களை ஊக்கு விக்கும் விதமாக அமைய வேண்டும்.
மண்டல அளவில் சிறந்த படைப்புகளை வழங்கும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், மாநில அளவில் முதல்இடம் பிடிக்கும் மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை பரிசு வழங்கப்படும். மாணவர் வழிகாட்டியாக புதுக்கோட்டை ஒருங்கிணைப்பாளர் ஆபிரகாம் லிங்கன் செயல்பட்டார்.
இப்புதிய கண்டுபிடிப்பு மூலம் மாணவர்கள், புதிய தொழில்களை துவக்குதல், செயல்படுத்துதல் குறித்து தொழில் முனைவோர்களுக்கு விளக்கம் அளிக்கும் விதத்தில் அமைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.