/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
புதிய விதிப்படி புகை பரிசோதனை மையம் கலெக்டர் எச்சரிக்கை
/
புதிய விதிப்படி புகை பரிசோதனை மையம் கலெக்டர் எச்சரிக்கை
புதிய விதிப்படி புகை பரிசோதனை மையம் கலெக்டர் எச்சரிக்கை
புதிய விதிப்படி புகை பரிசோதனை மையம் கலெக்டர் எச்சரிக்கை
ADDED : மே 04, 2024 05:19 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து வாகன புகை பரிசோதனை மையங்களிலும் பி.யு.சி.சி., 2.0 வெர்ஷன் மூலம் வாகன புகை பரிசோதனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அளவில் சிவகங்கை, திருப்புத்துார், காரைக்குடி ஆகிய நகரங்களில் 5 இடங்களில் அங்கீகரிக்கப்பட்ட வாகன புகை பரிசோதனை மையங்கள் செயல்படுகின்றன.வாகன புகை பரிசோதனை மையங்களின் செயல்பாட்டை மேம்படுத்தவும், புகார்களுக்கு இடம் தராத வகையில், புதிய தொழில்நுட்பத்தை புகுத்தும் பொருட்டு, அனைத்து வாகன புகை பரிசோதனை மையங்களில் மே 6 முதல் பி.யு.சி.சி.,2.0 வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட வேண்டும்.
இதன் மூலம் புகை பரிசோதனை மையங்களுக்கு வாகனங்களை கொண்டு வராமலேயே பரிசோதனை செய்ததாக சான்று வழங்க முடியாது. இப்புதிய வெர்ஷன் மூலம் வாகன புகை பரிசோதனை செய்யும் போது, வாகன பதிவெண்,புகை பரிசோதனை மைய பெயர் பலகையுடன்,சோதனையாளருடன் கூடிய புகைப்படம் வெளியிடப்பட வேண்டும்.
அதற்கு பின்னர் தான் சான்று கிடைக்கும்.
கலெக்டர் ஆஷா அஜித் கூறியதாவது:புதிய வெர்ஷன் பொருத்தாமல் வாகன புகை பரிசோதனை செய்வது தெரியவந்தால், அந்த புகை பரிசோதனை மையம் சீல் வைக்கப்படும்.