ADDED : ஜூன் 08, 2026 04:50 PM
மானாமதுரை, ஜூன் 9-
மானாமதுரை ராம்நகரில் தெருவிளக்கு அமைக்க வேண்டி நடைபெற்ற நீண்ட கால போராட்டத்திற்கு தீர்வு ஏற்படும் வகையில் தெருவிளக்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மானாமதுரை நகராட்சி பகுதியை ஒட்டிய விரிவாக்க பகுதியான ராம்நகரில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி தெருக்களில் விளக்குகள் அமைக்க வேண்டுமென மக்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். ராம்நகர் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள்,நகராட்சி கவுன்சிலர் இந்துமதி, பொதுமக்கள் ஆகியோர் நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி மற்றும் அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் இப்பகுதிகளில் தெருவிளக்கு அமைப்பதற்கான நிதியை மின்வாரியத்திடம் செலுத்தியதை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக ராம் நகர் பகுதியில் உள்ள மின் கம்பங்களில் தெருவிளக்கு இணைப்புகளை ஏற்படுத்தி விளக்குகள் பொருத்தும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
