/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விவசாயிகள் உதவி தொகைக்கென தபால் நிலையத்தில் சிறப்பு முகாம்; கோட்ட கண்காணிப்பாளர் தகவல்

ADDED : ஜூன் 16, 2024 10:19 PM
சிவகங்கை : விவசாயிகள் உதவி தொகை பெற நாளை (ஜூன் 18) முதல் தபால் நிலையங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது என சிவகங்கை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் எஸ்.மாரியப்பன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: பிரதமரின் கிசான் சம்மன் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 17 வது தவணை தொகை ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்பட உள்ளது.
இந்த தவணை தொகையை தபால் துறையில் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி வசதியை பயன்படுத்தி, அருகில் உள்ள தபால் நிலையங்களில் கட்டணமின்றி எடுத்து கொள்ளலாம்.
ரூ.10,000 வரை கட்டணமில்லை
பயோமெட்ரிக் அங்கீகாரத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் இணைத்துள்ள எந்த ஒரு வங்கி கணக்கில் இருந்தும் அருகில் உள்ள தபால் நிலையங்கள், தபால்காரர், கிராமிய அஞ்சல் ஊழியர்கள் மூலம் கட்டணமின்றி ரூ.10 ஆயிரம் வரை பெற்றுக்கொள்ளலாம்.
இதற்கான ஜூன் 30 வரை அனைத்து தபால் நிலையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும். இது தவிர இந்தியா போஸ்ட் மேமென்ட் வங்கி மூலம் வேலை உறுதி திட்ட பயனாளிகள், முதியோர் ஓய்வூதியம், மகளிர் உரிமை தொகை, கைம்பெண் உதவி தொகை, மாற்றுத்திறனாளி ஊக்கத்தொகை மற்றும் அனைத்து சமூக பாதுகாப்பு திட்டபயனாளிகள், சிலிண்டர் மானிய பயனாளிகள், மத்திய, மாநில அரசுகளின் அனைத்து நலத்திட்ட பயனாளிகள், ஏ.டி.எம்., இயந்திரத்தை தேடி செல்லும் நிலையை தவிர்த்து அருகில் உள்ள தபால் நிலையங்களில் வங்கி கணக்கில் கட்டணமின்றி பணம் எடுக்கலாம், என்றார்.