/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
உயர்கல்விக்கு செல்ல முடியாத நிலை உதவி செய்யவே சிறப்பு முகாம் கலெக்டர் ஆஷா அஜித் பேச்சு
/
உயர்கல்விக்கு செல்ல முடியாத நிலை உதவி செய்யவே சிறப்பு முகாம் கலெக்டர் ஆஷா அஜித் பேச்சு
உயர்கல்விக்கு செல்ல முடியாத நிலை உதவி செய்யவே சிறப்பு முகாம் கலெக்டர் ஆஷா அஜித் பேச்சு
உயர்கல்விக்கு செல்ல முடியாத நிலை உதவி செய்யவே சிறப்பு முகாம் கலெக்டர் ஆஷா அஜித் பேச்சு
ADDED : செப் 14, 2024 04:59 AM

சிவகங்கை: உயர்கல்விக்கு செல்ல முடியாத மாணவர்களின் நிலை அறிந்து உதவி புரியவே 'உயர்வுக்கு படி' முகாமை நடத்துவதாக சிவகங்கையில் கலெக்டர் ஆஷா அஜித் பேசினார்.
சிவகங்கை மருதுபாண்டியர் நகர் கல்வித்துறை கூட்டரங்கில், 2022 ---2023 மற்றும் 2023 -- 2024ம் ஆண்டில் பிளஸ் 2 முடித்து உயர்கல்விக்கு செல்லாத மாணவர்களுக்கு உயர்வுக்கு படி முகாம் நடந்தது. கலெக்டர் தலைமை வகித்தார்.
முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து முன்னிலை வகித்தார். மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி, பிற்பட்டோர் நல அலுவலர் ஜெயமணி, ஆதிதிராவிடர் நல அலுவலர் சுரேஷ்குமார், சிவகங்கை டி.எஸ்.பி., அமல அட்வின், வேலைவாய்ப்பு அலுவலர் மணி கணேஷ், முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன்குமார் பங்கேற்றனர். முகாமில் வங்கி கடன், உயர்கல்விக்கான சேர்க்கை முறை குறித்து ஸ்டால் அமைத்து விளக்கம் அளித்தனர்.
கலெக்டர் பேசியதாவது: சிவகங்கை உட்பட 5 தாலுகாவில் 2022 -- 2023 மற்றும் 2023 - -2024ல் பிளஸ் 2 முடித்து உயர்கல்வி செல்லாதவர்களை கண்டறிந்து, அவர்களை உயர்கல்விக்கு அனுப்பும் நோக்கில் இம்முகாம் நடக்கிறது.
பிற மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் சிவகங்கையில் உயர்கல்விக்கு செல்வோர் சதவீதம் அதிகம் தான். ஏன் இன்னும் உயர்கல்விக்கு செல்லாமல் இருக்கிறார்கள். அவர்களை உயர்கல்வியில் சேர்க்க முடியுமா என ஆலோசித்து வருகி றோம். இந்த காரணத்திற்காக உயர்கல்விக்கு செல்ல முடியவில்லை என்பதை அறிந்து அதற்கேற்ப உதவி செய்யப்படும்.
கல்வி கட்டணம் செலுத்த முடியாத சூழல் இருக்கலாம். இது போன்ற பிரச்னைகளை கண்டறிந்து, மாணவர்களை உயர்கல்விக்கு அனுப்ப உள்ளோம், என்றார்.