/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளைஞர்களுக்கு ஸ்பின்னிங் பயிற்சி
/
இளைஞர்களுக்கு ஸ்பின்னிங் பயிற்சி
ADDED : ஜூன் 08, 2024 05:32 AM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் 10 மற்றும் பிளஸ் 2 முடித்தவர்களுக்குஸ்பின்னிங் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
விவசாயத்திற்கு அடுத்து கிராம மக்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பு வழங்குவதில் ஜவுளித்துறைக்கு பங்கு உண்டு. நாட்டின் மொத்த ஜவுளி உற்பத்தியில், தமிழகத்தின் பங்கு முக்கியத்துவம் வகிக்கிறது.
இத்துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், தமிழ்நாடு அரசின் துணிநுால்துறை மற்றும் திறன் மேம்பாட்டு கழகம் மூலம் 10 மற்றும் பிளஸ் 2 முடித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி பெற விரும்புவோர் https://tntextiles.tn.gov.in/jobs/ இணையதளம் மூலம் விபரங்களை பதிவு செய்து பயன்பெறலாம் என்றார்.