/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விளையாட்டு போட்டி காலக்கெடு நீட்டிப்பு
/
விளையாட்டு போட்டி காலக்கெடு நீட்டிப்பு
ADDED : ஆக 27, 2024 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்படும் முதல்வர்விளையாட்டுபோட்டிக்கு ஆன்லைனில் பதிவு செய்ய செப்.2 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளர்கள் ஆகிய 5 பிரிவுகளில் 27 விளையாட்டுக்கள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல, மாநில அளவில் வரும் செப். மற்றும் அக். மாதங்களில் நடத்தப்பட உள்ளது.
இந்த போட்டிகளில் கலந்துகொள்ளும் விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணையதளத்தில் www.sdat.tn.gov.in வாயிலாக செப்.2 வரை பதிவு செய்யலாம்.