ADDED : மே 24, 2024 02:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை பொருட்களுக்கு எதிராகவும் தமிழக அரசை கண்டித்தும் எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் அரண்மனை வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மானாமதுரை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சதாம் உசேன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் அசாருதீன், செயலாளர் அப்துல் கலாம்,சிவகங்கை தொகுதி தலைவர் இம்தியாஸ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசாருதீன் கலந்து கொண்டனர்.