ADDED : ஆக 10, 2024 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் பாபா அமீர்பாதுஷா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவி சதுரங்கப் போட்டியில் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்ச்சி பெற்றார்.
குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டி கோவிலுார் ஆண்டவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பாபா அமீர் பாதுஷா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பாக 11,14,17,19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் மாணவர்கள் பங்கேற்றனர்.
அதில் 14 வயதிற்குட்பட்ட மாணவியர் பிரிவில் ஏழாம் வகுப்பு மாணவி தீபிகா வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வானார். தாளாளர் பாபா அமீர்பாதுஷா, முதல்வர் வரதராஜன் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர். பயிற்சியாளர் சோமநாதன் அதுலன், உடற்கல்வி ஆசிரியர் சிலம்பரசன் பாராட்டு பெற்றனர்.