/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு பஸ்கள் தாமதம் மாணவர்கள் அவதி
/
அரசு பஸ்கள் தாமதம் மாணவர்கள் அவதி
ADDED : மார் 11, 2025 05:05 AM
சிவகங்கை: சிவகங்கை பஸ் ஸ்டாண்டில்காலை நேரத்தில் மதுரை செல்வதற்கு அரசு பஸ்கள்தாமதமாக வருவதால் கல்லுாரி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் நேற்று காலை 7:45 முதல் 8:20 வரை மதுரை செல்வதற்கு பஸ் இல்லாததால் கல்லுாரி செல்லும் மாணவர்கள் அவதி அடைந்தனர்.
சிவகங்கையில் இருந்து திருமாஞ்சோலை, பூவந்தி, மதுரை உள்ளிட்ட பகுதியில் உள்ள கல்லுாரியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள் தினம் தோறும் காலை 7:45ல் இருந்து 8:30க்குள் செல்லும் அரசு பஸ்களில் தான் தினமும் பயணம் செய்கின்றனர்.
நேற்று சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் காலை 7:45 முதல் 8:20 வரை அரசு பஸ் இயக்கப்பட வில்லை. இதனால் பள்ளி கல்லுாரி மாணவர்கள் பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டவர்கள் அரைமணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர்.
இது குறித்த புகார் போக்குவரத்து பணிமனைக்கு செல்லவும் 8:20க்கு சிறப்பு பஸ் ஒன்று வந்துள்ளது. இந்த பஸ்சில் அதிகப்படியான பயணிகள் சென்றதால் அந்த பஸ்சும் பில்லுார் பகுதியில் செல்லும் போது பழுதானது. பின்னர்டிரைவர் அந்த பழுதை சரிசெய்து மீண்டும் இயக்கினார்.
போக்குவரத்து பணிமனை மோலாளர் கவியரசு கூறுகையில், அப்படி ஒரு பிரச்னை எதுவும் இல்லை. பஸ்கள் அனைத்தும் சரியான நேரத்திற்கு இயக்கப்படுகிறது. காலையில் ஒரு 15 நிமிடம் மட்டும் போக்குவரத்து பிரச்னையால் தாமதம் அடைந்திருக்குமே தவிர மற்றபடி எந்த பிரச்னையும் இல்லை என்றார்.