/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பஸ் வசதியின்றி பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவர்கள்
/
பஸ் வசதியின்றி பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவர்கள்
பஸ் வசதியின்றி பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவர்கள்
பஸ் வசதியின்றி பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவர்கள்
ADDED : பிப் 24, 2025 04:40 AM
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே பள்ளி நேரத்தில் பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் நடந்தும், மற்றவர் டூவீலர்களில் உதவி கேட்டு பள்ளிக்கு செல்கின்றனர்.
இவ்வொன்றியத்தில் ம.கோவில்பட்டி, வேங்கைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் சிங்கம்புணரி பகுதி பள்ளிகளில் படிக்கின்றனர்.
காலையில் பள்ளி நேரத்தின் போது இக்கிராமங்கள் வழியாக எந்த பஸ்சும் இயக்கப்படவில்லை. மதியம் மற்றும் மாலை நேரத்தில் மட்டும் தனியார் பஸ்கள் வருகின்றன.
இதனால் மாணவர்கள் 4 கி.மீ., தூரம் நடந்தே பள்ளிக்கு செல்கின்றனர்.
சில பெற்றோர்கள் ரோட்டோரத்தில் காத்திருந்து டூவீலரில் செல்பவர்களிடம் லிப்ட் கேட்டு ஆபத்தான முறையில் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர்.
எனவே பிரான்மலையில் இருந்து வேங்கைப்பட்டி வழியாக சிங்கம்புணரிக்கு பள்ளி நேரத்தில் அரசு டவுன் பஸ் இயக்கவேண்டும்.

