/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
துவரை, உளுந்து சாகுபடிக்கு மானியம்
/
துவரை, உளுந்து சாகுபடிக்கு மானியம்
ADDED : செப் 07, 2024 05:22 AM
சிவகங்கை: ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் வரப்பில் துவரம், உளுந்து சாகுபடிக்கு மானியம் தரப்படும் என வேளாண்மை இணை இயக்குனர் லட்சுமிபிரபா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
இத்திட்டத்தின் கீழ் 89 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் வரப்பு பயிராக துவரை, உளுந்து சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படுகிறது. நன்மை செய்யும் பூச்சிகளை கவர்ந்து இழுத்து, முதன்மை பயிர்களில் ஏற்படும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தவும், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் வருவதற்கும் பயனுள்ள திட்டமாக உள்ளது.
தற்போது துவரை சாகுபடி பரப்பு குறைந்து வருவதால், உளுந்திற்கு மாற்றாக துவரை விதைக்கலாம். உளுந்து எக்டேருக்கு 5 கிலோ, 50 சதவீத மானியத்துடன் அதிகபட்சம் ரூ.300 வீதம் வழங்கப்படுகிறது.
ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் 2 எக்டேர் வரை மானியம்தரப்படுகிறது. மானியம் பெற விரும்பும் விவசாயிகள் உழவர் செயலியில் பதிவு செய்யலாம்.
மேலும் உதவி வேளாண்மை அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம், என்றார்.